Published : 30 Aug 2022 09:40 AM
Last Updated : 30 Aug 2022 09:40 AM

“கனடா மக்களுக்கு அமைதி, மகிழ்ச்சியை இந்தப் பெயர் தரட்டும்” - ரஹ்மான் நெகிழ்ச்சி

கனடாவில் ரஹ்மான்

பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்காக 2 ஆஸ்கர் விருதைப் பெற்றவர். தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி படங்களுக்கு இசை அமைத்து வரும் அவருடைய பெயர், கனடா நாட்டின் மார்கம் நகரத்தில் உள்ள தெருவுக்குச் சூட்டப்பட்டுள்ளது. இதை ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அந்நாட்டின் மார்கம் நகரின் தெருவுக்கு அவர் பெயர் சூட்டுவது இது முதல் முறை அல்ல. 2013-ம் வருடம், அல்லா ரக்கா ரஹ்மான் என்ற அவர் முழுப் பெயரை ஒரு தெருவுக்குச் சூட்டியிருந்தனர். இப்போது, இரண்டாவது முறையாக அவருக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதை என் வாழ்க்கையில் கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. ஏ.ஆர்.ரஹ்மான் என்ற பெயர் என்னுடையது அல்ல. அதற்கு இரக்கம் என்று அர்த்தம். நம் அனைவருக்கும் பொதுவான கடவுளின் குணம். ஒருவர் இரக்கமுள்ளவரின் ஊழியராக மட்டுமே இருக்க முடியும்.

இந்தப் பெயர் கனடா மக்களுக்கு அமைதி, செழிப்பு, மகிழ்ச்சியை தரட்டும். இது, இன்னும் பணிபுரிய வேண்டும் என்ற உத்வேகத்தை தருகிறது|” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x