Published : 28 Aug 2022 03:26 PM
Last Updated : 28 Aug 2022 03:26 PM
தனுஷ் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் இதுவரை ரூ.64.72 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'யாரடி நீ மோகினி', 'உத்தம புத்திரன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் மீண்டும் தனுஷுடன் இணைந்த திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. நித்யாமேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இசையைமத்த இப்படம் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
உலகளவில் 600 திரையரங்குகளில் வெளியான இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது. இதனால் படம் வெளியான முதல் நாள் உலக அளவில் ரூ.9.52 கோடியை வசூலித்தது. இரண்டாவது நாள் பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக மக்கள் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதியது. இதனால் இரண்டாவது நாள் ரூ.8.79 கோடியை படம் வசூலித்தது.
அந்த வகையில் முதல் வாரம் மட்டும் ரூ.51.42 கோடி ரூபாயை படம் வசூலித்தது. இரண்டாவது வாரத்தின் முதல் நாள் ரூ.3.47 கோடியும், இரண்டாவது நாள் ரூ.4.61 கோடியும், மூன்றாவது நாள் ரூ.5.22 கோடியுடன் வசூலில் முன்னேற்றம் காணும் இப்படம் தற்போது வரை ரூ.64.72 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
#Thiruchitrambalam TN Box Office
Witnesses GROWTH on 2nd Saturday.
Week 1 - ₹ 51.42 cr
Week 2
Day 1 - ₹ 3.47 cr
Day 2 - ₹ 4.61 cr
Day 3 - ₹ 5.22 cr
Total - ₹ 64.72 cr#Dhanush— Manobala Vijayabalan (@ManobalaV) August 28, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT