Published : 23 Aug 2022 01:06 AM
Last Updated : 23 Aug 2022 01:06 AM
"தெலுங்கு திரையுலகம் மெகா குடும்பமோ அல்லது யாரோ ஒருவரின் தனிச் சொத்தோ அல்ல" என்று பவன் கல்யாண் பேசியுள்ளார்.
தெலுங்கு திரையுலகின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் தனது அடுத்தப் படங்கள் தொடங்குவதற்கு மத்தியில் மீண்டும் தீவிர அரசியலில் களமிறங்கியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை தனது கட்சித் தொண்டர்களைச் சந்தித்த அவர் சில நிமிடங்கள் உரையாற்றினார். ஆந்திராவில், "மேலாதிக்க அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்" என்ற பவன் கல்யாண் அதற்கு தெலுங்குத் திரையுலகை எடுத்துக்காட்டாக சொன்னார்.
தெலுங்கு திரையுலகின் ஜனநாயகம் குறித்து பேசிய அவர், "தெலுங்கு திரையுலகம் மெகா குடும்பமோ அல்லது யாரோ ஒருவரின் தனிச் சொத்தோ அல்ல. அது ஒரு சில ஹீரோக்களுக்கு மட்டும் சொந்தமானதும் கிடையாது. எந்த ஒரு சாதியையும் தெலுங்கு சினிமா இண்டஸ்ட்ரியில் இல்லை. 'கார்த்திகேயா 2' போன்ற ஒரு படம் தேசிய அளவில் வெற்றிபெறுகிறது. டோலிவுட் தேசியமாகிவிட்டது" என்று பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT