Published : 18 Aug 2022 06:43 PM
Last Updated : 18 Aug 2022 06:43 PM
''நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படத்தைப் பார்த்தேன். அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்'' என்று 'சீதா ராமம்' படத்தை பாராட்டியிருக்கிறார் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு.
ஹனுராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருனாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தன்னா நடித்த திரைப்பபடம் 'சீதா ராமம்'. கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்தப் படத்தை பார்த்த முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில், ''சீதா ராமம் படத்தைப் பார்த்தேன். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பத் துறையினரின் ஒருங்கிணைப்புடன் அழகான படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
காதல் கதையாக இல்லாமல், ராணுவ வீரரின் பின்னணியும் சேர்த்திருகிறார். இந்தப் படம் பலவிதமான உணர்ச்சிகளை கொடுக்கும். அனைவரும் கட்டாயம் இந்தப் படத்தை பார்க்க வேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து மற்றொரு ட்வீட்டில், ''நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல படத்தைப் பார்த்த உணர்வை ‘சீதா ராமம்’ தந்தது.போர் சத்தம் இல்லாமல் கண்களுக்கு இதமான இயற்கையின் அழகை கண்முன் கொண்டுவந்த இயக்குநர் ஹனு ராகவபுடி, தயாரிப்பாளர் அஷ்வினிதத், ஸ்வப்னா மூவி மேக்கர்ஸ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகள்'' என தெரிவித்துள்ளார்.
"సీతారామం" చిత్రాన్ని వీక్షించాను. నటీనటులు అభినయానికి, సాంకేతిక విభాగాల సమన్వయం తోడై చక్కని దృశ్యకావ్యం ఆవిష్కృతమైంది. సాధారణ ప్రేమ కథలా కాకుండా, దానికి వీర సైనికుని నేపథ్యాన్ని జోడించి, అనేక భావోద్వేగాలను ఆవిష్కరించిన ఈ చిత్రం ప్రతి ఒక్కరూ తప్పక చూడదగినది. pic.twitter.com/XGgxGGxVqF
— M Venkaiah Naidu (@MVenkaiahNaidu) August 17, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT