Published : 24 Jul 2022 02:40 PM
Last Updated : 24 Jul 2022 02:40 PM

ஆன்லைன் ரம்மி விளம்பரத்தால் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் வருந்துகிறேன் - மலையாள நடிகர் லால்

'ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்து தவறு செய்துவிட்டேன்'' என மலையாள நடிகர் லால் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு பலரும் அடிமையாகியிருக்கும் சூழலில், கடந்த காலத்தில் உயிரிழப்புகளும் ஏற்ப்பட்டன. இந்த செயலியை தடை செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு இதற்கு எதிரான சட்டத்தை இயற்ற பரிசீலித்து வருகிறது. இதனிடையே சில நடிகர்கள் இந்த ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்து வருவதற்கு எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. இந்நிலையில், மலையாளம், தமிழ் படங்களில் நடித்து வரும் நடிகர் லால் தான் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்ததற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், ''நான் ஒரு விளம்பரத்தில் நடித்தேன். அரசின் அனுமதியுடன் அவர்கள் என்னை அணுகினர். எனக்கு முன் பல நடிகர்கள் இதுபோன்ற விளம்பரங்களை செய்திருக்கிறார்கள். கோவிட் சமயத்தில் எனக்கு சில நிதிச் சிக்கல்கள் இருந்ததால், இந்த விளம்பரத்திற்கு ஒப்புக்கொண்டேன். அந்த விளம்பரம் யாருக்காவது பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன். தயவு செய்து நான் ஏதோ தவறு செய்துவிட்டதாக உணர்ந்ததால் இதைச் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x