Published : 23 Jul 2022 06:31 PM
Last Updated : 23 Jul 2022 06:31 PM

வாடிவாசல் டீசர் அல்ல - சூர்யா ஏறு தழுவல் நுட்பங்களை பயின்ற காட்சித் தொகுப்பு வெளியீடு

சூர்யாவின் பிறந்த நாளையொட்டி, 'வாடிவாசல்' படக்குழு சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ''இது 'வாடிவாசல்' படத்தின் முன்னோட்டமல்ல என்றும், சூர்யா நுட்பங்களை பயின்ற காட்சிகளின் தொகுப்பு'' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் நடிப்பில் சூர்யா நடிக்கும் திரைப்படம் 'வாடிவாசல்'. ஏறுதழுவுதலை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தை தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தில், நடிகர் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், சூர்யாவின் பிறந்த நாளையொட்டி தற்போது 'வாடிவாசல்' படக்குழு சார்பில் க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ''சூர்யா மாடுபிடி வீர ர்களிடமிருந்து ஏறு தழுவலின் நுட்பங்களை பயின்றபோது படம் பிடிக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்பு இது. வாடிவாசல் படத்தின் முன்னோட்டமல்ல'' என குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடியோவில் சூழ்ந்திருக்கும் கூட்டத்தை கடந்து முன்னேறி வருகிறார் சூர்யா. அவருக்கு எதிர்புறமாக களத்து வர தயாராக இருக்கும் காளை மாட்டை அடக்க தயாராக நின்றுகொண்டிருக்கிறார். தொடர்ந்து, களத்திலிருக்கும் ஒருவரை முட்டி சாய்க்கும் மாடு அடுத்ததாக சூர்யாவை நோக்கி திரும்பி முன்னேறுகிறது.

சூர்யாவின் பிறந்த நாளையொட்டி வெளியான இந்தக் காணொலியை ரசிகர்கள் பகிர்வதுடன், 'படத்தை காண ஆவலுடன்' இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

வீடியோவைக் காண

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x