Published : 23 Jul 2022 05:51 PM
Last Updated : 23 Jul 2022 05:51 PM

இது 9-வது தேசிய விருது... சத்தமின்றி சாதித்து வரும் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்!

படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்துக்கு 'சிவரஞ்சனியும் சில பெண்களும்' படத்திற்காக சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டடுள்ளதன் மூலம் 9 தேசிய விருதுகளை பெற்ற எடிட்டர் என்ற புகழை அவர் அடைந்துள்ளார்.

டெல்லியில் நேற்று 68-வது தேசிய விருதுகள் அறிவிக்கபட்டன. அதில் தமிழ் சினிமா 10 தேசிய விருதுகளை அள்ளியது. குறிப்பாக 'சூரரைப்போற்று' திரைப்படம் 5 விருதுகளைப் பெற்றுள்ளது. தவிர, 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' சிறந்த தமிழ்த் திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்காக சிறந்த எடிட்டர் விருது ஸ்ரீகர் பிரசாத்துக்கும், உறுதுணை நடிகை விருது லட்சுமி பிரியா சந்திரமெளலிக்கும் கிடைத்துள்ளது. இதில் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்துக்கு இது 9-வது தேசிய விருது ஆகும். '9-வது தேசிய விருது பெறுவது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி' என அவர் தெரிவித்திருந்தார்.

ஸ்ரீகர் பிரசாத் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடா உள்ளிட்ட ஏராளமான மொழிபடங்களுக்கு படத்தொகுப்பு செய்து வருகிறார். 1986-ம் ஆண்டு இந்தியிவில் வெளியான 'ஸ்வாதி' திரைப்படம் மூலம் திரைத்துறையில் படத்தொகுப்பாளராக அறிமுகமானவர் அடுத்த 4 ஆண்டுகளிலேயே முதல் தேசிய விருதைப்பெற்றார்.

'லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் 'அதிகமான மொழிகளில் படத்தொகுப்பாளராக பணியாற்றியவர்" என்ற சாதனையையும் அவர் பெற்றுள்ளார். இதுவரை 17 மொழி படங்களுக்கு எடிட்டிங் செய்துள்ளார். இந்திய சினிமாவில் பரந்துப்பட்ட பங்களிப்பை மேற்கொண்டதற்கான 'லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' -ன் 'பிபிள் ஆஃப் தி இயர்' (People of the Year) விருதும் அவருக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.

சினிமாவைப் பொறுத்தவரை அதில் இயக்குநர்களும், நடிகர்களும் மட்டுமே பெரியதாக கண்டுகொள்ளப்படும் நிலையில், திரைக்கு பின்னாலிருப்பவர்களின் உழைப்பு பெரிய அளவில் அடையாளம் காணப்படுவதில்லை.

அந்த வகையில், இந்திய சினிமாவின் முக்கியமான படத்தொகுப்பாளரான ஸ்ரீகர் பிரசாத் பல்வேறு விருதுகள் உள்பட 9 தேசிய விருதையும் பெற்றிருப்பது கவனத்துக்குரியது. நூற்றுக்கணக்கான படங்களுக்கு படத்தொகுப்பு செய்தவர், தற்போது 'பொன்னியின் செல்வன் பாகம் 1' படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார்.

ஸ்ரீகர் பிரசாத் தேசிய விருது பெற்ற படங்களின் விவரம்:

  • சிறந்த படத்தொகுப்பு - ராக் (Raakh)1989
  • சிறந்த படத்தொகுப்பு - ராக் பிராக் ( (Rag-Birag)1996
  • சிறந்த நான்-ஃபீச்சர் பிலிம் எடிட்டிங் - நவுகா சரித்ரமு (Nauka Caritramu) 1997
  • சிறந்த படத்தொகுப்பு - தி டெரரிஸ்ட் (The Terrorist) 1998
  • சிறந்த படத்தொகுப்பு - வானபிரஸ்தம் (Vaanaprastham) 2000
  • சிறந்த படத்தொகுப்பு - கன்னத்தில் முத்தமிட்டால் 2002
  • சிறந்த படத்தொகுப்பு - ஃபிராக்(Firaaq) 2008
  • சிறந்த நடுவர் விருது - குட்டி ஸ்ராங்க் (Kutty Srank),கமினே (Kaminey),கேரள வர்மா பழசி ராஜா
  • (Kerala Varma Pazhassi Raja)
  • சிறந்த படத்தொகுப்பு - சிவரஞ்சனியும் சில பெண்களும் 2020

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x