Published : 21 Jul 2022 03:35 PM
Last Updated : 21 Jul 2022 03:35 PM
மும்பை: 'தி கிரே மேன்' சிறப்புக் காட்சி மும்பை மாநகரில் திரையிடப்பட்டது. இந்த நிகழ்விற்கு நடிகர் தனுஷ் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் வந்திருந்தார். இப்போது அது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் தனுஷ் உட்பட பலரும் நடித்துள்ள 'தி கிரே மேன்' திரைப்படம் நாளை (ஜூலை 22) நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. கேப்டன் அமெரிக்கா, அவெஞ்சர்ஸ் போன்ற படங்களை இயக்கியதற்காக பொதுவெளியில் பரவலாக அறியப்படுபவர்கள் அந்தோணி மற்றும் ஜோ ருஸ்ஸோ. இவர்கள் இருவரும் சகோதரர்கள். 'ருஸ்ஸோ சகோதரர்கள்' என இவர்கள் பிரபலம்.
கடந்த 2009-இல் வெளியான 'தி கிரே மேன்' நாவலை அடிப்படையாக கொண்டு அதே பெயரில் திரைப்படத்தை இயக்கியுள்ளனர். த்ரில்லர் ஜானரில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இதில் முதன்மைக் கதாபாத்திரங்களில் ரையான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். முக்கியமாக இதில் இந்திய நடிகர் தனுஷும் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் புரொமோஷன் பணிகளை படக்குழு உலகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறது. நடிகர் தனுஷும் இதில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், சிறப்புக் காட்சி மும்பையில் திரையிடப்பட்டது.
இந்நிகழ்வில் பாரம்பரிய உடையான வெள்ளை வேட்டி மற்றும் சட்டை அணிந்து பங்கேற்றார் தனுஷ். மேலும் இந்த நிகழ்வில் இருகரம் கூப்பி வணக்கம் சொல்லும் வகையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்திருந்தார். ருஸ்ஸோ சகோதரர்களும் அவருடன் ‘வணக்கம்’ சொல்லும் வகையில் போட்டோ எடுத்துக் கொண்டார்.
விக்கி கௌஷல், விஷால் பரத்வாஜ், அலயா பர்னிச்சர்வாலா, அதிதி போஹன்கர், ராஜ் மற்றும் டி.கே போன்ற பிரபலங்கள் இதில் பங்கேற்று இருந்தனர்.
Welcome to India @Russo_Brothers #Vanakkam pic.twitter.com/UOnq4YUl8N
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT