Published : 20 Jul 2022 07:57 AM
Last Updated : 20 Jul 2022 07:57 AM

படப்பிடிப்பு நடத்த ஆஸிதிரேலிய அமைச்சர் அழைப்பு

மேற்கு ஆஸ்திரேலிய அமைச்சர் ஹான் ரோஜர் குக் தலைமையிலான குழு, அந்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தவும், தொழில் முதலீட்டை ஈர்க்கவும் இந்தியா வந்துள்ளது.

இந்த குழு, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களை சென்னையில் நேற்று சந்தித்தது. இதில் இந்திய தொழிலக கூட்டமைப்பின் (CII) தலைவரும், தயாரிப்பாளருமான டி.ஜி.தியாகராஜன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, தனஞ்செயன், ரவி கொட் டாரக்கரா, சுரேஷ்காமாட்சி, பெப்சிதலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் மோகன் ராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதில் பேசிய ரோஜர் குக், மேற்கு ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு நடத்த வருமாறு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். அங்கு, ரூ.75 கோடி செலவழித்து படம் எடுத்தால், 30 சதவீதம் சலுகை அளிப்பதாக கூறினார். ‘‘அதைவிட குறைவாக செலவிட்டாலும், 30 சதவீத சலுகை தேவை’’ என்று தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர். அதை பரிசீலிப்பதாக அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x