Published : 19 Jul 2022 05:37 PM
Last Updated : 19 Jul 2022 05:37 PM
நடிகர் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் படம் ஒன்றை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் தங்களது நிலுவையிலுள்ள ப்ராஜெக்ட்டுகளை முடித்த பின்னரே இந்தப் படத்துக்கான வேலைகள் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.
'விக்ரம்' படம் இயக்குநர் லோகேஷ் கனகராஜை இந்திய அளவில் அடையாளப்படுத்தியுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜயுடன் லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணைகிறார். 'விஜய் 61' என அழைக்கப்படும் அப்படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அக்டோபர் மாதம் 'விஜய் 61' படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாக உள்ள இப்படத்திற்கான படப்பிடிப்பு மும்பையில் நடைபெற உள்ளது.
இதனிடையே, மைத்ரி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சல்மான் கான் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தில் இது தொடர்பாக ரகசியமாக நடைப்பெற்ற பேச்சுவார்த்தையில் சல்மான் கான், லோகேஷ் கனகராஜ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதில் சல்மான் கான் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் தற்போதைய மற்றும் நிலுவையில் உள்ள கமிட்மென்ட்களை முடித்த பின்னரே, இந்த படத்தில் ஒப்பந்தமாவார்கள் எனக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT