Published : 21 Jun 2022 09:17 PM
Last Updated : 21 Jun 2022 09:17 PM
விஜயகாந்த் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுவதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சினையால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது.
மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் தற்போது நலமுடன் உள்ளார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிசிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார்.
விஜயகாந்த் உடல் நலம் குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ''என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.
என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
— Rajinikanth (@rajinikanth) June 21, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT