Published : 11 Jun 2022 06:24 PM
Last Updated : 11 Jun 2022 06:24 PM
லோகேஷ் - கமலின் 'விக்ரம்' திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே உலகம் முழுவதும் ரூ.250 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது 'விக்ரம்' திரைப்படம். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார். படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
தமிழத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் தொடர்ந்து ரசிகர்கள் கூட்டம் நிரம்புகின்றன. 'விக்ரம்' படம் வெளியான முதல் நாள் இந்தியாவில் மட்டும் ரூ.32 கோடியை வசூலித்தது; உலக அளவில் ரூ.48.68 கோடியை எட்டியது. பின்னர், படம் வெளியாகி 3 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலிதது. உலக அளவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில், படம் வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையில், உலக அளவில் படம் ரூ.250 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.165 கோடி வசூலாகியுள்ளது. இதன்மூலம் 'பீஸ்ட்' படத்தின் வசூல் சாதனையை 'விக்ரம்' திரைப்படம் முறியடித்துள்ளது. பார்வையாளர்களின் கூட்டம் குறையாததால் படம் விரைவில் ரூ.300 கோடி பாக்ஸ் ஆபீஸ் கிளப்பில் இணையும் என்று திரைப்பட வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
In it's first week, #Vikram has grossed ₹ 250 Crs+ at the WW Box office..
— Ramesh Bala (@rameshlaus) June 10, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT