Published : 01 Jun 2022 04:04 PM
Last Updated : 01 Jun 2022 04:04 PM
இந்திய மன்னர்களான பிருத்விராஜ், மகாராணா பிரதாப் ஆகியோரின் கதைகளை வரலாற்று பாடப்புத்தகங்களில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு நடிகர் அக்ஷய் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜபுத்திர மன்னர் பிருத்விராஜ் சவுகான் வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'பிருத்விராஜ்' திரைப்படம் ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த படத்தில் அக்ஷகுமார் நாயகனாகவும், 2017-ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற மனுஷி சில்லர் நாயகியகாவும் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தப் படம் தொடர்பாக நடிகர் அக்ஷய் குமார் பேசுகையில், ''இந்திய மன்னர்களின் வரலாற்றை எழுத யாரும் தயாராக இல்லை. இந்த விஷயத்தை ஆய்வு செய்து, இதை மாற்ற முடியுமா என்று பார்த்து மத்திய கல்வி அமைச்சர் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன்.
அதற்காக நான் முகலாய மன்னர்கள் குறித்து படிக்க வேண்டாம் என்று கூறவில்லை. மாறாக சமநிலை தொடர வேண்டும் என்பது தான் என் விருப்பம். முகலாயர்கள் போல இந்திய மன்னர்கள் குறித்தும் மாணவர்களுக்கு சொல்லிகொடுக்க வேண்டும். அவர்களும் வரலாற்றில் சிறந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, நமது வரலாற்று பாடப்புத்தகங்களில் சாம்ராட் பிருத்விராஜ் சவுகானைப் பற்றி இரண்டு மூன்று வரிகள் மட்டுமே உள்ளன. ஆனால் படையெடுப்பாளர்களைப் பற்றி நிறைய குறிப்பிடப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
#WATCH | Nobody is there to write about it in our history books. I would like to appeal to the Education Minister to look into this matter and see if we can balance it. We should know about Mughals but know about our kings also, they were great too: Actor Akshay Kumar to ANI pic.twitter.com/05WKtQ4dNw
— ANI (@ANI) June 1, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT