Published : 03 Jan 2022 08:09 PM
Last Updated : 03 Jan 2022 08:09 PM

'தி மேட்ரிக்ஸ்'ஸின் 70% சம்பளத்தை லுகேமியா ஆய்வுக்காக வழங்கிய கியானு ரீவ்ஸ்!

பிரபல கனேடிய நடிகரான கியானு ரீவ்ஸ், லுகேமியா ஆராய்ச்சிக்கு தனது `தி மேட்ரிக்ஸ்' படத்தின் 70 சதவீத சம்பளத்தை நன்கொடையாக வழங்கி இருக்கிறார். கடந்த 1999-ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படம் `தி மேட்ரிக்ஸ்'. சயின்ஸ் பிக்சன் கதையாக வெளிவந்து வசூல் ரீதியாக பெரிய வெற்றிபெற்ற படம் இது. இதில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர் கியானு ரீவஸ். அந்த வரிசையில் தற்போது `தி மேட்ரிக்ஸ் ரிசெரக்‌ஷன்ஸ்' அடுத்த பாகம் வெளியாகி இருக்கிறது.

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ஓரளவு வரவேற்பை பெற்று வருகிறது இந்தப் படம். இந்தப் படத்துக்கு கிடைத்த சம்பளத்தில் 70 சதவீதத்தை தற்போது லுகேமியா / ரத்தப் புற்றுநோய் ஆராய்ச்சிக்கு தரவுள்ளார். கியானு ரீவ்ஸின் தங்கை கிம் கடந்த 10 வருடங்களாக புற்றுநோயை எதிர்த்து போராடி வந்த நிலையில், லுகேமியா ஆராய்ச்சிக்கு நன்கொடை அளிக்க முன்வந்துள்ளார். 55 வயதாகும் கிம் புற்றுநோயால் கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார். அவரை குணமாக்க நடிகர் கியானு ரீவ்ஸ் அமெரிக்க மதிப்பில் 5 மில்லியன் டாலர் செலவழித்ததாக கூறப்படுகிறது.

தங்கையின் நிலையை உணர்ந்து புற்றுநோயை எதிர்த்து போராடுபவர்களுக்காக தனி அறக்கட்டளை ஒன்றை தொடங்கி நடத்தி வரும் நடிகர் கியானு ரீவ்ஸ், அதன்மூலமாக நிறைய உதவிகளை செய்து வருகிறார். நீண்ட காலமாகவே, தொண்டு பணிகளுக்காக அறியப்படும் நடிகர் கியானு ரீவ்ஸ் கடந்த 2020 ஜூனில் தனது வருமானத்தின் பெரும்பகுதியை நன்கொடையாக அளித்தார் என்பதும் நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x