Published : 24 Dec 2021 11:22 AM
Last Updated : 24 Dec 2021 11:22 AM
சென்னை:காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் என கூறி அவரது மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
சென்னையில் இன்று பிரபல திரைப்பட இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் காலமானார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் 60-க்கும் மேற்பட்ட படங்களை கே.எஸ்.சேதுமாதவன் இயக்கியுள்ளார்.
இவர்கள் எம்.ஜி.ஆர் நடிப்பில் நாளை நமதே, கமல் நடிப்பில் நம்மவர் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
தேசிய விருதுகள் பல பெற்ற இயக்குனர் சேதுமாதவன், குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்துள்ளார். வயது முதிர்வு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். அவர் மறைவுக்கு திரையுலகினர் பல இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:
காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன், புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம். மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர். தன் கலைச்சாதனைகளால் என்றென்றும் நினைவு கூரப்படுவார். என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள்."
இவ்வாறு கமல் ஹாசன் தனது புகழஞ்சலிகளை செலுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT