Published : 30 Nov 2021 12:18 PM
Last Updated : 30 Nov 2021 12:18 PM
ஹாலிவுட் தற்போதுதான் சரியான திசையில் செல்கிறது என்று நடிகர் ஜார்ஜ் க்ளூனி கூறியுள்ளார்.
ஹாலிவுட்டில் பிரபல நடிகராக இருப்பவர் ஜார்ஜ் க்ளூனி. ‘ஒஷன்’ஸ் லெவன்’, ‘கிராவிட்டி’, ‘அப் இன் தி ஏர்’, ‘டிஸெண்டன்ட்ஸ்’, ‘பேட்மேன் & ராபின்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ‘சிரியானா’ என்ற படத்துக்கான சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதையும் வென்றுள்ளார்.
இந்நிலையில் வார இதழ் ஒன்றுக்கு ஜார்ஜ் க்ளூனி அளித்த பேட்டியில் ஹாலிவுட் தற்போதுதான் சரியான திசையில் செல்வதாகக் கூறியுள்ளார்.
அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
''ஒரு நிறுவனத்தின் முதலாளி என்பதற்காகவே பணிபுரியும் ஊழியர்களிடம் இஷ்டத்துக்கு நடந்துகொள்ள முடியாது. ஒரு மோசமான முதலாளியாக இருந்தால் நம்மால் இனி தப்பிக்கவே முடியாது. எப்படியும் வெளியே தெரிந்துவிடும்.
தயாரிப்பாளர் ஹார்வீ வெய்ன்ஸ்டீன் செய்த மோசமான விஷயம் தொழிலில் அவர் ஒரு மோசமான நபராக இருந்ததுதான். இனி யாரும் அப்படி இருக்க முடியாது. இனி எந்த ஒரு தயாரிப்பாளரும் ஒரு இளம்பெண்ணுடன் ஹோட்டல் அறையில் தனியாக ஆடிஷனை நடத்த மாட்டார். ஹாலிவுட் தற்போதுதான் சரியான திசையில் செல்கிறது. திரைத்துறை இப்போது முன்பை விட பாதுகாப்பாக இருக்கிறது''.
இவ்வாறு ஜார்ஜ் க்ளூனி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT