சிலம்பரசனுக்கு அடுத்த ஆண்டு திருமணம்: ஜெய்

சிலம்பரசனுக்கு அடுத்த ஆண்டு திருமணம்: ஜெய்
Updated on
1 min read

சிலம்பரசனுக்கு அடுத்த ஆண்டு திருமணம் நடைபெறும் என்று ஜெய் தெரிவித்துள்ளார்.

சிம்பு, ஜெய் இருவருமே நெருங்கிய நண்பர்களாக வலம் வருபவர்கள். இருவரும் இணைந்து 'வேட்டை மன்னன்' என்னும் படத்தில் நடித்தார்கள். அந்தப் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில், சிம்புவுக்குத் தீவிரமாகப் பெண் தேடும் படலம் நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஜெய் உறுதி செய்துள்ளார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு ஜெய் பேசியதாவது:

" 'பகவதி' படத்தில் விஜய் சாருடன் இணைந்து நடித்தேன். அதன் பிறகு மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையில், இதுவரை 150 தடவை வாய்ப்பு கேட்டுவிட்டேன். ஆனால், அவரோ, ''நீ தான் ஹீரோ ஆகிட்ட இல்ல.. அப்புறம் ஏன்..?'' என்று கேட்டார்.

சிலம்பரசன் திருமணத்திற்குப் பிறகு நான் திருமணம் செய்துகொள்வேன். அனேகமாக சிம்புவுக்கு அடுத்த வருடம் திருமணம் நடந்து விடும் என்று நினைக்கிறேன்".

இவ்வாறு ஜெய் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in