Published : 29 Apr 2021 06:09 PM
Last Updated : 29 Apr 2021 06:09 PM

அசுரனைத் தொடர்ந்து தெலுங்கில் ரீமேக் ஆகும் கர்ணன்

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'கர்ணன்' திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'கர்ணன்'. தாணு தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

ஏப்ரல் 9-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. இதுவரை வெளியான தனுஷ் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையையும் ‘கர்ணன்’ பெற்றுள்ளது. மேலும் மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளது.

இந்த நிலையில் 'கர்ணன்' திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ் கைப்பற்றியதாகத் தெரிகிறது. இவரது மகன் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸை வைத்து இவர் இந்தப் படத்தைத் தயாரிக்க உள்ளார். சுரேஷ் ஏற்கெனவே பல தமிழ்ப் படங்களைத் தெலுங்கில் மறு ஆக்கம் செய்துள்ளார். பல படங்களை டப்பிங் செய்தும் வெளியிட்டுள்ளார்.

ஏற்கெனவே தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியின் 'அசுரன்' திரைப்படம் 'நாரப்பா' என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் வெங்கடேஷ், ப்ரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x