Published : 07 Apr 2021 09:00 AM
Last Updated : 07 Apr 2021 09:00 AM

'நான் ஏன் வாக்களிக்கவில்லை தெரியுமா?': நடிகர் பார்த்திபன்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் நடிகர் பார்த்திபன் வாக்களிக்கவில்லை. தேர்தலுக்கு முந்தைய நாள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ட்வீட் செய்திருந்தார்.

ஆனால், அடுத்த நாள் அவரே வாக்களிக்கவில்லை. இது குறித்து இன்று காலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"வணக்கமும் நன்றியும்! ஜனநாயக கடமையை சீராக செய்த
சிறப்பானவர்களுக்கு!
வருத்தமும், இயலாமையும்.
இரண்டாம் தவணை COVID-க்கான தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண், காது, முகம் முழுவதும் வீங்கிவிட்டது. டாக்டருக்கு போட்டோ அனுப்பியே மருத்துவம் செய்துகொண்டேன். எனவே, தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகச் சிலருக்கு மட்டுமே இது போன்ற reactions. அதுவும் எனக்கு ஏற்keனவே allergy issues இருந்ததால் மட்டுமே trigger ஆனது.என் வருத்தம் அது நேற்றாகிப் போனதில்..."
என்று பதிவிட்டுள்ளார்.

கரோனா தடுப்பூசி பக்கவிளைவு காரணமாகவே வாக்களிக்க வர இயலவில்லை எனப் பதிவிட்டுள்ள அவர் அதேவேளையில் பக்க விளைவுகள் தனிநபர் சார்ந்தது அதனால் யாரும் தடுப்பூசியை தவிர்க்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x