Last Updated : 05 Apr, 2021 06:11 PM

 

Published : 05 Apr 2021 06:11 PM
Last Updated : 05 Apr 2021 06:11 PM

அமெரிக்காவில் கரோனா கால வசூல் சாதனை படைத்த காட்ஸில்லா வெர்சஸ் காங்

கரோனா காலத்தில் வெளியான படங்களிலேயே அதிக ஆரம்ப வசூல் பெற்ற திரைப்படம் என்கிற சாதனையை 'காட்ஸில்லா வெர்சஸ் காங்' திரைப்படம் படைத்துள்ளது.

வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் ஆடம் விங்கார்ட் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் முதல் ஐந்து நாட்களில் 48.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது. அமெரிக்க திரையரங்குகள் மீண்டும் முழுவீச்சில் திறக்கப்பட்ட பின் வெளியான திரைப்படங்களில் இதுவே அதிகபட்ச வசூலாகும்.

கிட்டத்தட்ட ஒரு வருடம் வீட்டிலிருந்தபடியே திரைப்படங்களை ரசித்து வந்த மக்கள் தற்போது பெரிய திரையில் திரைப்படத்தைக் கண்டு களிக்க தயாராக இருப்பதையே இந்த வசூல் காட்டுவதாக ஹாலிவுட் வர்த்தக நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இத்தனைக்கும் கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்தாமல் இந்தப் படத்தை ஹெச்பிஓ மேக்ஸ் ஓடிடி தளத்திலும் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு உள்ளது.

நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட நகரங்களில் இன்னும் கோவிட் கட்டுப்பாடுகள் நிலவுவதால் 50 சதவித இருக்கைகளை நிரப்ப மட்டுமே திரையரங்குகளில் அனுமதி உள்ளது. எனவே முழு அனுமதி இருந்திருந்தால் இந்த வசூல் இரட்டிப்பாகியிருக்கும் என்று கூறப்படுகிறது.

லெஜண்டரி எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் மான்ஸ்டர் வெர்ஸ் என்கிற புதிய பட வரிசையை ஆரம்பித்துள்ளது. அதில் இதுவரை 'காட்ஸில்லா', 'காங் ஸ்கல் ஐலேண்ட்', 'காட்ஸில்லா கிங் ஆஃப் தி மான்ஸ்டர்ஸ்' ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இவற்றின் தொடர்ச்சியாகவே 'காட்ஸில்லா வெர்சஸ் காங்' வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பு ஆரம்பமாகிறது என்று 2015 ஆம் ஆண்டே அறிவிக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x