Published : 04 Apr 2021 11:17 AM
Last Updated : 04 Apr 2021 11:17 AM
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘99 ஸாங்ஸ்’. இப்படத்தை விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இப்படம் உருவான விதம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
ஒரு திரைப்படத்தை எப்படி உருவாக்குவது என்பது ஒரு பாடலை உருவாக்குவது போன்றது தான் என மணிரத்னம் ஒருமுறை என்னிடம் கூறினார். ஒரு பாடலில் அறிமுகம் இருக்கும், பாடலுக்கென்று ஒரு களம் இருக்கும், பின்னணி இசை இருக்கும். இவை அனைத்தும் ஒன்று சேரும்போது ஒரு அழகான பாடல் நமக்கு கிடைக்கும்.
ஒரு கதையை உருவாக்குவதும் இதே போன்றதுதான் என்று அவர் என்னிடம் கூறினார். கதை எழுதுவது போன்ற ஒரு கலையை நமது மொழியில் சொல்வது எவ்வளவு அருமையானது என்பதை அப்போதுதான் நான் உணர்ந்து கொண்டேன்.
அது எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது. எனக்கு கதைகள் மிகவும் பிடிக்கும். எனக்கு மக்களை பற்றியும் அவர்களது வாழ்க்கைமுறையை பற்றியும் தெரிந்து கொள்வது பிடிக்கும். நம் இந்திய மக்கள் மட்டுமின்றி மற்ற கலாச்சாரத்தை சேர்ந்த மக்களைப் பற்றியும்தான்.
‘99 ஸாங்ஸ்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 16-ம் தேதி அன்று இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT