Published : 24 Mar 2021 08:01 PM
Last Updated : 24 Mar 2021 08:01 PM

5 மொழிகளில் வெளியாகும் அர்ஜுன் சக்ரவர்த்தி

சென்னை

இந்தியாவுக்காக விளையாடிய கபடி வீரரின் உண்மைக் கதையான 'அர்ஜுன் சக்ரவர்த்தி' படத்தை 5 மொழிகளில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

1980களில் இந்தியாவுக்காக விளையாடிய கபடி வீரரின் உண்மைக் கதை ‘அர்ஜுன் சக்ரவர்த்தி’ என்ற பெயரில் படமாக உருவாகிறது. வேணு கே.சி.எழுதி, இயக்கி வரும் இந்தப் படத்தை ஸ்ரீனி குப்பலா தயாரித்து வருகிறார்.

புதுமுகங்களான விஜய ராம ராஜூ, சிஜா ரோஸ் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இதில் அஜய், தயானந்த் ரெட்டி, அஜய் கோஷ், துர்கேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன் ‘அர்ஜுன் சக்ரவர்த்தி’ படத்தின் பணிகள் தொடங்கி, தற்போது 75 சதவீதப் படப்பிடிப்பு முடிந்துள்ளது. தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர் உள்ளிட்ட சுமார் 125 இடங்களில் இதற்கான படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

குழந்தைப் பருவம் முதல் நடுத்தர வயது வரையிலான தோற்றத்தைச் சரியாக வெளிப்படுத்துவதற்காக பல்வேறு உருவ மாற்றங்களுக்காக இந்தப் படத்தின் நாயகன் மெனக்கெடல் செய்துள்ளார். மேலும், கடந்த காலத்தை மிகச் சரியாகப் பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக 1960 மற்றும் 1980களில் இருந்த கிராமங்கள் மற்றும் ஹைதராபாத் நகரம் ஆகியவை கலை இயக்குநர் சுமித் படேல் தலைமையிலான குழுவால் பெரும் பொருட்செலவில் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் 'அர்ஜுன் சக்ரவர்த்தி’ படத்தை இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x