Published : 09 Mar 2021 07:56 PM
Last Updated : 09 Mar 2021 07:56 PM
கோடை விடுமுறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ளது 'உலகம் சுற்றும் வாலிபன்'
பழைய காலத்துப் படங்கள் பலவும் தற்போது டிஜிட்டல் முறையில் மெருகேற்றப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. அந்தப் படங்களை புதிய பொலிவுடன் பார்த்து ரசிப்பதற்குப் பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. அதன் வரிசையில் டிஜிட்டல் முறையில் வெளியாகவுள்ளது 'உலகம் சுற்றும் வாலிபன்'.
எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட, பெரும் திருப்பத்தின்போது வெளியான படம் 'உலகம் சுற்றும் வாலிபன்'. இதில் எம்.ஜி.ஆர் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விஞ்ஞானியான முருகன் மின்னலை பிடித்து அதை ஆக்கபூர்வ பணிக்கு பயன்படுத்த நினைப்பார். அத்திட்டத்தின், 'பார்முலா'வை வில்லன் கூட்டம், அபகரிக்க முயற்சி செய்யும். இதை, விஞ்ஞானியின் தம்பியும், புலனாய்வுத் துறை அதிகாரியுமான ராஜூ எப்படி எதிரிகளின் சதித்திட்டத்தை முறியடிக்கிறார் என்பது தான் கதை.
முருகன், ராஜூ என இரண்டு கதாபாத்திரங்களில் எம்.ஜி.ஆர் நடித்திருப்பார். லதா, மஞ்சுளா, சந்திரகலா என மூன்று நாயகிகள் நடித்திருப்பார். பல்வேறு நாடுகளில் படமாக்கப்பட்ட இந்தக் கதையை எம்.ஜி.ஆரே இயக்கியிருந்தார். விஸ்வநாதன் இசையில், கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தார்கள்.
தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன், டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ரிஷி மூவிஸ் சார்பில் சாய் நாகராஜன் வழங்க, உலகம் முழுவதும் சரோஜா பிக்சர்ஸ் வெளியிட, தமிழகம் முழுவதும் 7 ஜி பிலிம்ஸ் மற்றும் சரோஜா பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து வெளியிடுகிறார்கள்.
Am very much delighted to bag the TamilNadu theatrical rights of #PuratchiThalaivar #MGR’s All Time Blockbuster Movie #UlagamSutrumValiban #உலகம்சுற்றும்வாலிபன் #Summer2021
Get ready to see our very own #MGR on big screens with highly restoration in #4K #DolbyAtmos @v2moffl_ pic.twitter.com/GqeqTSqpLu— 7G Films (@7GFilmsSiva) March 2, 2021
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT