Last Updated : 10 Feb, 2021 06:33 PM

 

Published : 10 Feb 2021 06:33 PM
Last Updated : 10 Feb 2021 06:33 PM

மனநலப் பிரச்சினையால் எந்த உயிரும் மாண்டுவிடாத உலகத்தைக் காண விரும்புகிறேன்: தீபிகா படுகோன்

தனது தொழிலில் உச்சம் தொட்ட காலகட்டத்தில் தனக்கிருந்து மன அழுத்தம் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், மனநலப் பிரச்சினையால் எந்த உயிரும் மாண்டுவிடாத உலகத்தைக் காண தான் விருமுவதாகக் கூறியுள்ளார்.

2007ஆம் ஆண்டு ஓம் சாந்தி ஓம் திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமான தீபிகா மனநல ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை உருவாக்க தி லிவ் லவ் லாஃப் பவுண்டேஷன் என்கிற அமைப்பை 2015ஆண்டு நிறுவினார். இதன் மூலம் மன அழுத்தம், பதட்டம் உள்ளிட்ட பல்வேறு மனநலப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தீபிகாவே மன அழுத்தம் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்டவர் என்பதால் தன்னைப் போல அவதிப்படும் பலருக்கு உதவ இப்படி ஒரு அமைப்பைத் தொடங்கியுள்ளார்.

லிவ் லவ் லாஃப் பவுண்டேஷன் அமைப்பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை தீபிகா பகிர்ந்துள்ளார். அதோடு, "மன நலப் பிரச்சினை நான் தனிப்பட்ட முறையில் அனுபவித்த ஒன்று. லிவ் லவ் லாஃபின் பயணத்தில் கடந்த ஐந்து வருடங்களாக தானமளித்தவர்கள், கூட்டாளிகள், அரசு அதிகாரிகள் மற்றும் எங்கள் அற்புதமான அணி என அத்தனை பேரும் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்.

ஆனால் மன நலப் பிரச்சினையோடு வாழ்ந்தவர்களுக்கும், அவர்களைப் பார்த்துக் கொண்டவர்களுக்கும் தான் அதிகபட்ச தாக்கம் இருந்துள்ளது. மனநலப் பிரச்சினையால் எந்த உயிரும் மாண்டுவிடாத உலகத்தைக் காண நான் விரும்புகிறேன். எங்கள் அமைப்பு அந்த இலக்கை நிஜமாக்கத்தான் அர்ப்பணிப்புடன் இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x