Published : 08 Feb 2021 12:23 PM
Last Updated : 08 Feb 2021 12:23 PM

சர்வதேச விருது வென்ற ‘கூழாங்கல்’- விக்னேஷ் சிவன் மகிழ்ச்சி

பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கூழாங்கல். யுவன் ஷங்கர் ராஜா இசைமைத்துள்ள இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படம் ரோட்டர்டாம் 50வது சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று மிக உயரிய விருதான டைகர் விருதை வென்றுள்ளது. 2017ஆம் ஆண்டு வெளியான ‘செக்ஸி துர்கா’ மலையாளப்படத்துக்கு பிறகு இவ்விருதைப் பெறும் இரண்டாவது படம் இது.

இப்படம் குறித்து ரோட்டர்டாம் விருது குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்த எளிமையான படம் எங்களை மிகவும் கவர்ந்துள்ளது. இப்படத்தை பார்த்ததுமே எங்களுக்கு பிடித்து விட்டது. குறைந்தபட்ச எளிமையுடன் அதிகபட்ச தாக்கத்தை உருவாக்கி, படத்தின் இயக்குநர் தனது முக்கிய கதாபாத்திரங்களின் அதே நம்பிக்கையுடனும் உறுதியுடனும் தனது இலக்கை அடைகிறார். இதன் விளைவு தூய சினிமா, அதன் கடுமையான கதைக்கு மத்தியிலும் அழகிய நகைச்சுவையுடன் நம்மை கவர்ந்திழுக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

‘கூழாங்கல்’ படத்துக்கு டைகர் விருது கிடைத்தது குறித்து விக்னேஷ் சிவன் கூறியுள்ளதாவது:

டைகர் விருதைப் பெறும் முதல் தமிழ்ப் படம் ‘கூழாங்கல்’. வினோத்தின் கடின உழைப்பு அவரது முதல் படத்திலெயே ஒரு மிகப்பெரிய கவுரவத்தை பெற்றுத் தந்துள்ளது. ரவுடி பிக்சர்ஸின் முதல் படம் இது. எனவே நாங்களும் அளப்பரிய மகிழ்ச்சியில் இருக்கிறோம். மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக உணர்கிறோம். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. வினோத் மற்றும் குழுவினருக்கும் நன்றி. பல ஊர்ல இருக்குறவங்கள ஓடவிட்டாப்ல.

இவ்வாறு விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x