Last Updated : 02 Feb, 2021 11:29 AM

 

Published : 02 Feb 2021 11:29 AM
Last Updated : 02 Feb 2021 11:29 AM

ஆதரவற்ற முதியவர்களுக்கு வீடு: சோனு சூட் அறிவிப்பு

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நகராட்சி ஊழியர்களால் துன்புறுத்தப்பட்ட ஆதரவற்ற முதியவர்களுக்கு வீடு வழங்குவதாக நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

கரோனா நெருக்கடி காரணமாக பிற மாநிலங்களில் போக்குவரத்து வசதியின்றி சிக்கித் தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அவரவர் சொந்த ஊருக்குத் திரும்ப சோனு சூட் போக்குவரத்து உதவிகளைச் செய்தார். தொடர்ந்து மாணவர்களுக்கும், ஏழைகளுக்கும் ஏராளமான உதவிகளைச் செய்து வருகிறார். இதனால் சமூக வலைதளங்களில் பலரும் அவரை ஒரு சூப்பர் ஹீரோவாகப் பாவித்து புகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆதரவற்ற முதியவர்கள் சிலரை நகராட்சி ஊழியர்கள், ஒரு லாரியில் அடைத்து இந்தூர் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு நெடுஞ்சாலை அருகே முரட்டுத்தனமாக இறக்கிவிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. பலரும் அந்த நகராட்சி ஊழியர்களைக் கடுமையாக விமர்சித்ததுடன் அவர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தச் சூழலில் ஆதரவற்ற அந்த முதியவர்களுக்கு தன் சொந்தச் செலவில் வீடு வழங்குவதாக நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:

''சில முதியவர்களை நகரிலிருந்து கொண்டு போய் புறநகர்ப் பகுதியில் இறக்கி விடுவதாக ஒரு செய்தி என் கண்ணில் பட்டது. அவர்களுக்கு ஒரு வீட்டை உருவாக்கித் தர இந்தூரில் இருக்கும் சகோதர, சகோதரிகள் உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். அவர்களுடைய உரிமையை அவர்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன். மேலும், அவர்களுக்கு உண்ண உணவும், குடிக்கத் தண்ணீரும், தங்க வீடும் வழங்க விரும்புகிறேன். உங்களுடைய உதவி இல்லாமல் இதை என்னால் செய்ய இயலாது. வயதான தங்கள் பெற்றோரைக் கைவிடும் அனைத்துக் குழந்தைகளுக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும்''.

இவ்வாறு சோனு சூட் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x