Published : 21 Jan 2021 05:53 PM
Last Updated : 21 Jan 2021 05:53 PM
'லூசிஃபர்' படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதன் இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மலையாளத்தில் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'லூசிஃபர்'. மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
ராம்சரண், சூப்பர் குட் பிலிம்ஸ் மற்றும் என்.வி.ஆர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளனர். மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் 'லூசிஃபர்' ரீமேக்கில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கவுள்ளார். இதர கதாபாத்திரங்களுக்கான தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஹைதராபாத்தில் இந்தப் படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக தமன், கலை இயக்குநராக சுரேஷ் செல்வராஜன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். மார்ச் மாதத்தில் படப்பிடிப்புக்குச் செல்ல படக்குழு ஆயுத்தமாகி வருகிறது.
2001-ம் ஆண்டு 'ஹனுமன் ஜங்ஷன்' என்ற தெலுங்குப் படத்தின் மூலமாகத்தான் இயக்குநராக அறிமுகமானார் மோகன் ராஜா. அதற்குப் பிறகு எந்தவொரு தெலுங்குப் படத்தையும் மோகன் ராஜா இயக்கவில்லை. சுமார் 20 ஆண்டுகள் கழித்து, 'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக்கை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Megastar @KChiruTweets’ new film kickstarted with a Pooja today..
Presented by @KonidelaPro, @MegaaSuperGood1 & NVR Films
: @jayam_mohanraja
: Nirav Shah
: @MusicThaman
: @sureshsrajan
: #LakshmiBhoopal
Regular shoot commences from February 2021. #Chiru153 pic.twitter.com/qDWLsoaC2G— Konidela Pro Company (@KonidelaPro) January 20, 2021
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT