Published : 17 Jan 2021 12:18 PM
Last Updated : 17 Jan 2021 12:18 PM

‘டைட்டானிக்’ படத்துக்குப் பிறகு உடல்ரீதியான கேலிகளை எதிர்கொண்டேன் - கேட் வின்ஸ்லெட் பகிர்வு

‘டைட்டானிக்’ படம் வெளியான பிறகு தான் அதிகளவில் உடல்ரீதியாக கேலி செய்யப்பட்டதாக நடிகை கேட் வின்ஸ்லெட் கூறியுள்ளார்.

1997ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான படம் ‘டைட்டானிக்’. இப்படம் 1912ஆம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை அடிப்படையாகக் கொண்டு உருவான படம்.

உலகம் முழுவதும் பிரம்மாண்ட வெற்றி பெற்ற இப்படம் 11 ஆஸ்கர் விருதுகளைக் குவித்தது. இப்படத்தில் நடித்த லியார்னாடோ டிகாப்ரியோ மற்றும் கேட் வின்ஸ்லெட் இருவரும் பெரும் புகழை அடைந்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த ஆன்லைன் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்ட ‘டைட்டானிக்’ பட நாயகி கேட் வின்ஸ்லேட் இப்படத்தின் மூலம் கிடைத்த புகழால் தனக்கு கிடைத்த அவமானங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

‘டைட்டானிக்’ வெளியான பிறகு என்னை நானே பாதுகாத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டேன். ஒவ்வொரு நாளுக்கும் இடையிலான இடைவெளி மிக நீண்டதாக இருந்தது.

ஏராளமான உடல்ரீதியான அவமானங்களை எதிர்கொண்டேன், அதிகம் கேலி செய்யப்பட்டேன். பிரிட்டிஷ் பத்திரிகைகள் என்னிடம் அன்பாக நடந்து கொள்ளவில்லை. பிரபலமாவதன் அர்த்தம் அதுதான் என்றால், நிச்சயமாக அப்போது அதற்கு நான் தயாராக இருக்கவில்லை.

இவ்வாறு கேட் வின்ஸ்லெட் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x