Published : 12 Jan 2021 11:01 AM
Last Updated : 12 Jan 2021 11:01 AM
‘வார்’ படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்தின் அடுத்த படத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கவுள்ளார்.
ஹ்ரித்திக் ரோஷன் - டைகர் ஷெராஃப் இணைந்து நடித்த திரைப்படம் ‘வார்’. இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்தார். ஆதித்யா சோப்ரா தயாரித்திருந்த இப்படத்தில் வாணி கபூர், அஷுதோஷ் ராணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டாம் க்ரூஸின் ‘மிஷன் இம்பாஸிபிள்’ பாணியில் எடுக்கப்பட்டிருந்த இப்படம் பெரும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் சித்தார்த் ஆனந்த் இயக்கவுள்ள அடுத்த படத்தில் மீண்டும் ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நாயகியாக தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் முதல் முறையாக ஹ்ரித்திக் - தீபிகா ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்துக்கு ‘ஃபைட்டர்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் மூலம் சித்தார்த் ஆனந்த் தயாரிப்பாளராகவும் களம் இறங்குகிறார். ‘வார்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அதே பாணியில் இப்படத்தை உருவாக்கப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களைப் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT