Published : 09 Jan 2021 02:30 PM
Last Updated : 09 Jan 2021 02:30 PM
திரையரங்கில் டிக்கெட் விலை உயர்வுக்கு அரவிந்த் சாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு பெரிய நடிகரின் படங்கள் வெளியாகும்போது, திரையரங்குகளில் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படும். இதனால் பெரும் பிரச்சினை ஏற்படும். சமூக வலைதளத்தில் கூட இதற்கெல்லாம் நடிகர்கள் குரல் கொடுக்க மாட்டார்களா என்று விமர்சனங்கள் எழுவதுண்டு.
இப்போது ஜனவரி 13-ம் தேதி 'மாஸ்டர்' வெளியாகவுள்ளது. முதலில் 100% இருக்கைக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு, தற்போது அதை ரத்து செய்துள்ளது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதே வேளையில், வழக்கம்போல் டிக்கெட்கள் அதிக விலைக்கு விற்கத் தொடங்கியுள்ளனர்.
டிக்கெட் விற்பனை விவகாரம் தொடர்பாக, முதன் முறையாக ஆதரவு தெரிவித்துள்ளார் நடிகர் அரவிந்த் சாமி.
இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
"வெவ்வேறு செலவில் தயாரிக்கப்படும் வெவ்வேறு தயாரிப்புகள், வெவ்வேறு தரத்தில் இருக்கும் திரையரங்குகளில், வெவ்வேறு ரியல் எஸ்டேட் மதிப்பு இருக்கும் பகுதிகளில் திரையிடப்படும்போது திரைப்பட டிக்கெட்டின் விலை ஏன் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது எனக்கு எப்போதும் புரிந்தது இல்லை".
இவ்வாறு அரவிந்த் சாமி தெரிவித்துள்ளார்.
I have never understood why the price of movie tickets needs to be restricted. How do u hv the same price for different products, produced at different costs, exhibited through different quality of theatres, in different areas with different real estate investments?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT