Published : 02 Jan 2021 03:50 PM
Last Updated : 02 Jan 2021 03:50 PM
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் திரைப்படம் குறித்த புதிய தகவலை, இயக்குநர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
'சூரரைப் போற்று' படத்துக்குப் பிறகு, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'வாடிவாசல்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தவுள்ளார் சூர்யா. இதில் பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்தின் படப்பிடிப்புதான் முதலில் தொடங்கவுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஜனவரியிலிருந்து படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று கூறப்பட்டது.
ஆனால் புத்தாண்டை முன்னிட்டு இப்படம் பற்றிய புதிய தகவலை இயக்குநர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் பிப்ரவரி மாதம் தான் படப்பிடிப்புத் தொடங்கவுள்ளதாக பாண்டிராஜ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள். 2021 நமக்கு ஒரு சிறப்பான ஆண்டாக அமையும். உங்கள் எதிர்பார்பும் , ஆவலும் புரிகிறது ! சூட்டிங் பிப்ரவரியில்தான்.
இன்னும் முக்கியமான 2 கேரக்டர் இறுதி ஆனதும் 2, 3 வாரங்களில் சம்பவங்கள் தொடங்கும். காத்திருப்போமே #Suriya40" என்று பாண்டிராஜ் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT