Published : 28 Dec 2020 08:09 PM
Last Updated : 28 Dec 2020 08:09 PM

வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு படமாகிறது

சென்னை

வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. தைத்திருநாளில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

18 கே ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், பெரும் பொருட்செலவில் உருவாகும் படம் 'வீரமங்கை வேலுநாச்சியார் - சிவகங்கை ராணி'. இந்தப் படத்தை ராஜேந்திரன் மணிமாறன் இயக்குகிறார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர், கன்னடத்தில் எடுக்கப்பட்ட 'சூரியவம்சம்' ரீமேக்கின் ஒளிப்பதிவுக்காக விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகங்கை ஆண்ட வேலுநாச்சியாரின் 224-வது நினைவு நாள் டிசம்பர் 25-ம் தேதி அன்று அனுசரிக்கப்பட்டது. அன்றைய தினம் 'வீரமங்கை வேலுநாச்சியார் - சிவகங்கை ராணி' படத்துக்கான அலுவலகத்தின் பூஜை போடப்பட்டது. இதன் படப்பிடிப்பைத் தைத்திருநாளில் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

வேலுநாச்சியார் கதையைப் படமாக எடுக்க சட்டரீதியான உரிமை பெறப்பட்டுள்ளது. இதில் வேலுநாச்சியாராக நடிக்கப் பல சரித்திரப் படங்களில் நடித்து அனுபவம் பெற்ற முன்னணி நடிகை ஒப்பந்தமாகியுள்ளார். அவருடன் பல முன்னணி நடிகர்களும் நடிக்கவுள்ளனர்.

ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம், வசனகர்த்தாவாக ஜீவபாரதி, எடிட்டராக அசோக் மேத்தா ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இசையமைப்பாளராகப் பணிபுரிய முன்னணி இசையமைப்பாளரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x