Published : 17 Dec 2020 08:24 PM
Last Updated : 17 Dec 2020 08:24 PM
'அந்தாதூன்' தமிழ் ரீமேக்கில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க கார்த்திக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற 'அந்தாதூன்' படத்தின் தமிழ் ரீமேக் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தியாகராஜன் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை 'பொன்மகள் வந்தாள்' இயக்குநர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கவுள்ளார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்க ஆயத்தமாகி வருகிறார்கள்.
ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த், தபு கதாபாத்திரத்தில் சிம்ரன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதர கதாபாத்திரங்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. தற்போது நடிகர் கார்த்திக் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். யாருடைய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பதைப் படக்குழு தெரிவிக்கவில்லை.
இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பாடல் பதிவு உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் நாயகி உள்ளிட்ட இதர கதாபாத்திரங்களில் யார் நடிக்கவுள்ளார்கள் என்பது தெரியவரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT