Last Updated : 09 Dec, 2020 11:55 AM

 

Published : 09 Dec 2020 11:55 AM
Last Updated : 09 Dec 2020 11:55 AM

விலங்குகளுடன் இணக்கமாக வாழ்வதன் மூலமே நாம் சிறந்த மனிதர்களாக முடியும்: நடிகர் ஜான் ஆபிரஹாம்

விலங்குகளோடும் பறவைகளோடும் இணக்கமாக வாழ்வதன் மூலமே நாம் சிறந்த மனிதர்களாக முடியும் என்று நடிகர் ஜான் ஆபிரஹாம் கூறியுள்ளார்.

பாலிவுட்டில் பிரபல நடிகராக இருப்பவர் ஜான் ஆபிரஹாம். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றித் தொடர்ந்து விலங்குகளுக்காகவும் குரல் கொடுத்து வருபவர். பல ஆண்டுகளாக பீட்டா இயக்கத்துடன் இணைந்து சர்க்கஸில் விலங்குகளைப் பயன்படுத்துவது, பறவைகளைக் கூண்டுகளில் அடைப்பது போன்றவற்றுக்கு எதிரான போராட்டங்களில் பங்கெடுத்து வருகிறார்.

இதன் விளைவாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பீட்டா இயக்கம் 2020ஆம் ஆண்டின் சிறந்த மனிதருக்கான விருதை ஜான் ஆபிரஹாமுக்கு வழங்கி கவுரவித்தது.

திரையுலகைச் சேர்ந்த பலரும் ஜான் ஆபிரஹாமுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தனது விருதை விலங்குகளுக்கு அர்ப்பணிப்பதாக ஜான் ஆபிரஹாம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

''எனக்குக் கிடைத்த இந்த விருதை நான்கு கால் நண்பர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். விலங்குகளோடும் பறவைகளோடும் இணக்கமான வாழ்வதன் மூலமே நாம் சிறந்த மனிதர்களாக முடியும். அவற்றை அரவணைத்து, அன்பு செலுத்தி, அவற்றின் மீது பரிதாபம் காட்டுவதன் மூலமே நாம் அன்பையும் இரக்கத்தையும் கற்றுக்கொள்ள முடியும். தங்களுக்காகக் குரல் கொடுக்க முடியாத விலங்குகளுக்காக பீட்டா இயக்கம் தொடர்ந்து போராடி வருகிறது. அவர்களுடைய இலக்கை நான் ஆதரிக்கிறேன். இந்த விசேஷ கவுரவத்துக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்''.

இவ்வாறு ஜான் ஆபிரஹாம் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x