Published : 08 Dec 2020 08:11 PM
Last Updated : 08 Dec 2020 08:11 PM
'டெனெட்' படத்தில் இந்தியாவில் படமாக்கப்பட்ட காட்சிகளில் ஒளிப்பதிவாளர்கள் குழுவில் பணிபுரிந்துள்ளார் நீரவ் ஷா.
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘டெனெட்’. பெரும் பொருட்செலவில் தயாராகியுள்ள இப்படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பேட்டின்சன், டிம்பிள் கபாடியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒரு பகுதி இந்தியாவில் படமாக்கப்பட்டது.
கரோனா நெருக்கடியால் இந்தியாவில் கடந்த 4-ம் தேதிதான் இப்படம் வெளியானது. வழக்கம்போல் இந்தப் படமும் 2-3 முறை பார்த்தால்தான் புரியும் என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், படத்தின் உருவாக்கத்துக்குப் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இப்படத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளரான நீரவ் ஷா பணிபுரிந்திருப்பது தெரியவந்துள்ளது. 'டெனெட்' படத்தின் இறுதியில் வரும் பெயர்கள் பட்டியலில் கூடுதல் ஒளிப்பதிவு என்ற இடத்தில் நீரவ் ஷா பெயர் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் நடைபெற்ற 'டெனெட்' படப்பிடிப்பின்போது அவர் பணிபுரிந்துள்ளார்.
'பில்லா', 'தலைவா', '2.0' உள்ளிட்ட பல்வேறு வரவேற்பு பெற்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர் நீரவ் ஷா. தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்துக்கு ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT