Published : 07 Dec 2020 11:23 AM
Last Updated : 07 Dec 2020 11:23 AM

ட்விட்டரில் அனுராக் - அனில் கபூர் காரசார விவாதம்: மாறி மாறித் தொடர்ந்த கலாய்ப்புப் பதிவுகள்

இயக்குநர் அனுராக் காஷ்யப், நடிகர் அனில் கபூர் இருவரும் ட்விட்டரில் காரசாரமாக விவாதம் செய்துள்ளனர். ஒருவரை மற்றொவர் அதீதமாகக் கிண்டலடித்துப் பதிவிட்டது ரசிகர்கள் பலருக்கு நல்ல பொழுதுபோக்காக அமைந்தது.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் 'ஏகே வெர்சஸ் ஏகே' (AK vs AK) என்கிற திரைப்படம் வெளியாகவுள்ளது. ஒரு கடுமையான இயக்குநர், நடிகர் ஒருவரின் மகளை கடத்தியதால் என்ன நடக்கிறது என்பதே இந்தக் கதை. இதில் நடிகராக அனில் கபூரும், இயக்குநர் கதாபாத்திரத்தில் அனுராக்கும் நடிக்கின்றனர்.

இந்தப் படத்துக்கு விளம்பரம் செய்யும் நோக்கில் இருவரும் ட்விட்டரில் ஒருவரை ஒருவர் கலாய்த்துப் பதிவிட ஆரம்பித்தனர். முழு உரையாடலின் தமிழாக்கம் பின்வருமாறு:

அனில் கபூர்: இதை நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன், மீண்டும் சொல்கிறே ஏனென்றால் அதற்கு அவர்கள் தகுதியானவர்களே. டெல்லி க்ரைம் குழுவுக்கு வாழ்த்துகள். நமது நாட்டைச் சேர்ந்த இன்னும் பலருக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. (என்று ஷெஃபாலி ஷாவைக் குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார்)

அனுராக்: தகுதியானவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதைப் பார்க்க மகிழ்ச்சி. உங்கள் ஆஸ்கர் எங்கே? இல்லையா? ஓ, சரி சரி, பரிந்துரை?

அனில் கபூர்: நீங்கள் ஆஸ்கருக்குப் பக்கத்தில் வந்தது, ஸ்லம்டாக் மில்லினியர் ஆஸ்கர் வாங்கும் போது அதைத் தொலைக்காட்சியில் பார்த்த தருணம் தான் (என்று கிண்டலடித்து உங்களால் அதைச் செய்ய முடியாது என்று ஹாஷ்டேகில் குறிப்பிட்டார்)

அனுராக்: இதை யார் சொல்வது பார்த்தீர்களா, பிறர் ஒதுக்கியதை பெறும் ஒருவர் சொல்கிறார். ஸ்லம்டாக் படத்துக்கு முதலில் நீங்கள் தேர்வு செய்யப்படவில்லை தானே (என்று ஷாரூக் கான் முதலில் அந்த கதாபாத்திரம் வேண்டாம் என்று மறுத்ததைக் குறிப்பிட்டு நக்கலடித்தார்)

அனில் கபூர்: வேண்டாம் என்று ஒதுக்கியதைப் பெற்றேனோ இல்லை எடுத்துக் கொண்டேனோ எனக்குக் கவலையில்லை. வேலையில் எல்லாம் ஒன்றுதான். உங்களைப் போன்று வாய்ப்புக்குக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கவில்லை.
மகனே, என்னைப் போன்ற திரை வாழ்க்கை அமைய உனக்கு அதிகத் திறமைகள் தேவை. 40 வருடங்களாக இந்த வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

அனுராக்: 40 ஆண்டுகளாக ஓடும் வண்டிகள் அனைத்துமே மதிப்புமிக்கவை அல்ல. சில வண்டிகள் ஆபத்தானவையும் கூட (என்று அனில் கபூரின் சில திரைப்படங்களின் போஸ்டர்களைப் பகிர்ந்துள்ளார்)

அனில் கபூர்: என் வாகனமாவது 40 ஆண்டுகள் ஓடியது. உன் வாகனம் இன்னும் வீட்டை விட்டே வெளியேவரவில்லையே

அனுராக்: உங்கள் வண்டி ரேஸ் 3யைச் சேர்ந்தது என்றால் அது ஓடுவதற்கு பதில் வீட்டிலேயே இருக்கலாம்

அனில் கபூர்: என்றும் மறக்காதே, பாம்பே வெல்வட் வசூல் 43 கோடி ரூபாய். ரேஸ் 3 வசூல் 300 கோடி ரூபாய்

அனுராக்: பரவாயில்லை சார். அழாதீர்கள் (என்று சொல்லி அனில் கபூர் குழந்தை போல வேடமிட்டிருக்கும் பழைய புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்ர்)

அனில் கபூர்: நான் அழுகிறேன் என்றால் அதற்கு ஒரே காரணம் உன்னுடன் இந்தத் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதுதான். ஆனால் நீ கவலைப்படாதே, நான் தான் கடைசியில் ஜெயிக்கப் போகிறேன்.

என்று இந்த உரையாடலை முடித்துள்ளார். பாலிவுட்டின் பிரபலங்கள் இருவர் எப்படிப் பொதுவில் இது போல கிண்டலடித்துக் கொள்கிறார்கள் என்று ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் போது இது 'ஏகே வெர்சஸ் ஏகே' திரைப்படத்தின் விளம்பரத்துக்காக நடந்த ஜாலி உரையாடல் என்பதை இயக்குநர் சித்தார்த் மல்ஹோத்ரா தனது ட்வீட்டில் நெட்ஃபிளிக்ஸை பக்கத்தைக் குறிப்பிட்டு சொன்ன பிறகே அனைவருக்கும் தெளிவானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x