Published : 30 Nov 2020 12:56 PM
Last Updated : 30 Nov 2020 12:56 PM
'நடிகன்' வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, சிபிராஜ் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.
1990-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி பி.வாசு இயக்கத்தில் வெளியான படம் 'நடிகன்'. சத்யராஜ், குஷ்பு, கவுண்டமனி, மனோரமா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ராஜ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்த இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
இப்போது வரை 'நடிகன்' படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகின்றன. இன்று (நவம்பர் 30) 'நடிகன்' படம் வெளியாகி 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை இப்படத்தின் ரசிகர்கள் #30YearsofNadigan என்ற ஹேஷ்டேகில் குறிப்பிட்டுக் கொண்டாடி வருகிறார்கள்.
'நடிகன்' படம் தொடர்பாக சத்யராஜின் மகன் சிபிராஜ் தனது ட்விட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:
"என் மனதுக்கு நெருக்கமான படம். அதன் கதை மற்றும் வெற்றியால் மட்டுமல்ல, எனது விடுமுறை சமயத்தில் கொடைக்கானலில் படப்பிடிப்பு நடந்தபோது மிக இனிமையாகக் கழிந்த நேரத்தினாலும்தான்”.
இவ்வாறு சிபிராஜ் தெரிவித்துள்ளார்.
A film close to my heart not only because of it’s content & success but also the lovey time we had while it was being shot in Kodaikanal during my vacation #Sathyaraj @khushsundar #Isaignani #AachiManorama #Goundamani #PVasu #Ramanathan #30YrsOfBlockbusterNadiagan #Nadigan pic.twitter.com/i4aYE4O2ap
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) November 30, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT