Published : 20 Nov 2020 02:11 PM
Last Updated : 20 Nov 2020 02:11 PM
'மூக்குத்தி அம்மன்' 2-ம் பாகம் கண்டிப்பாக உருவாகும் என்று இயக்குநர் ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஆர்ஜே பாலாஜி - என்.ஜே.சரவணன் ஆகியோரது கூட்டு இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் 'மூக்குத்தி அம்மன்'. இதில் நயன்தாரா, ஊர்வசி, மெளலி, ஆர்ஜே பாலாஜி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் திரையரங்க வெளியீட்டைத் தவிர்த்து, ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.
தீபாவளி அன்று வெளியான இந்தப் படத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதே சமயத்தில் சிலர் இந்தப் படத்தின் கதையமைப்பு தொடர்பாக கடும் அதிருப்தியும் தெரிவித்து வருகிறார்கள்.
'மூக்குத்தி அம்மன்' படத்துக்குக் கிடைத்த வரவேற்பு தொடர்பாக, ஹாட்ஸ்டார் ஓடிடி ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார் ஆர்ஜே பாலாஜி. அப்போது, "'மூக்குத்தி அம்மன் 2' உருவாக வாய்ப்புள்ளதா" என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஆர்ஜே பாலாஜி கூறியிருப்பதாவது:
"முதல் பாகம் ஓடவில்லை என்றாலும், 2-ம் பாகம் எடுக்கிறார்கள். 2-ம் பாகம் கண்டிப்பாக எடுப்போம். ஆனால், 25-ம் பாகம், 26-ம் பாகம் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. 'எல்.கே.ஜி' படத்துக்குப் பிறகு 'யூ.கே.ஜி' படமா என்று பலரும் கேட்டார்கள். அதேபோல் இப்போதும் உடனே 'மூக்குத்தி அம்மன் 2' எல்லாம் கிடையாது. நல்லதொரு ஐடியா இருக்கும்போது, முதல் பாகத்தை விட நன்றாக இருக்கும் என்ற எண்ணம் வரும்போது கண்டிப்பாக இரண்டாம் பாகம் எடுப்போம். உண்மையில், 'மூக்குத்தி அம்மன் 2' எடுக்கும் எண்ணம் உள்ளது".
இவ்வாறு ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment