Published : 02 Nov 2020 01:50 PM
Last Updated : 02 Nov 2020 01:50 PM
மீண்டும் விசாரணைக்கு வர சம்மன் அனுப்பிய பிறகு, நடிகை தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ் தலைமறைவாகியுள்ளதாகத் தெரிகிறது.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் போதை மருந்து சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. போதை மருந்து தொடர்பாக நடந்த வாட்ஸ் அப் உரையாடல் ஒன்று வெளியானது. இதில் நடிகை தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷின் பெயர் சம்பந்தப்பட்டிருந்தது. இதனால் போதை மருந்து தடுப்புப் பிரிவினர் கரிஷ்மா பிரகாஷுக்குச் சம்மன் அனுப்பி கடந்த மாதம் விசாரணை மேற்கொண்டனர் .
சமீபத்தில் கரிஷ்மா பிரகாஷின் அபார்ட்மெண்டில் நடந்த சோதனையில் போதைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனால் அக்டோபர் 27 ஆம் தேதி அன்று மீண்டும் விசாரணைக்கு வரச் சொல்லி கரிஷ்மாவுக்குச் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அன்று கரிஷ்மா விசாரணைக்கு வரவில்லை. ஏன் வர முடியவில்லை என்பது குறித்த விளக்கமோ தகவலோ அதிகாரிகளுக்குத் தரவில்லை.
இந்நிலையில் கரிஷ்மா எங்கிருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கரிஷ்மா பணியாற்றும் க்வான் நிறுவனத்தின் ஊழியர்களிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இன்னொரு பக்கம் தன் வீட்டிலிருந்து போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கரிஷ்மா முன்ஜாமீன் கோரியிருக்கிறார்.
ஏற்கெனவே இந்த வழக்கில் நடிகைகள் தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் உள்ளிட்டோர் விசாரிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மொபைல்களையும் பறிமுதல் செய்து தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT