Published : 02 Nov 2020 11:50 AM
Last Updated : 02 Nov 2020 11:50 AM
தன்னை ஆளுமை என்று சிலர் அழைப்பது வருத்தமாக உள்ளதாக நடிகர் சாமுவேல் ஜாக்ஸன் கூறியுள்ளார்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக ஹாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் சாமுவேல் ஜாக்ஸன். ‘டு தி ரைட் திங்ஸ்’, ‘குட்ஃபெல்லாஸ்’, ‘ட்ரூ ரொமான்ஸ்’ உள்ளிட்ட 150க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
க்வெண்டின் டரண்டினோ இயக்கத்தில் சாமுவேல் நடித்த ‘பல்ப் ஃபிக்ஷன்’, ‘ஜாங்கோ அன்செய்ன்டு’, ‘ஹேட்ஃபுல் 8’ உள்ளிட்ட படங்கள் மிகவும் பிரபலமானவை. கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக மார்வெல் படங்களில் நிக் ஃப்யூரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற 'சாவணா' திரைப்பட விழாவில் சாமுவேல் ஜாக்ஸனுக்கு ‘சினிமா ஆளுமை’ என்ற விருது வழங்கப்பட்டது.
இதுகுறித்து ஒரு வார இதழுக்குப் பேட்டியளித்துள்ள சாமுவேல் கூறியுள்ளதாவது:
''ஆன்லைன் மக்கள் ‘ஆளுமை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைப் பார்க்கிறேன். பிறரால் செய்ய முடியாத விஷயங்களை அல்லது மிக அற்புதமான விஷயங்களைச் செய்பவர்களே ஆளுமை எனப்படுவர். சிலர் என்னை ஆளுமை என்று சொல்வது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது. நான் என் கடின முயற்சியாலும், உறுதியாலும் மட்டுமே இந்த இடத்துக்கு வந்துள்ளேன்''.
இவ்வாறு சாமுவேல் ஜாக்ஸன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT