Published : 29 Oct 2020 06:10 PM
Last Updated : 29 Oct 2020 06:10 PM
'தேவர் மகன்' படத்தில் பணிபுரிந்தது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என்று பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
1992-ம் ஆண்டு வெளியான படம் 'தேவர் மகன்'. பரதன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்துக்குக் கமல் கதை, திரைக்கதை எழுதியிருந்தார். சிவாஜி, கமல், நாசர், ரேவதி, கெளதமி, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.
பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் இப்போதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 25-ம் தேதி 'தேவர் மகன்' வெளியாகி 28 ஆண்டுகளை நிறைவு செய்தது. கமல் ரசிகர்களும், படக்குழுவினரும் படம் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.
'தேவர் மகன்' படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்த பி.சிஸ்ரீராம், 28 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"தேவர் மகன் - இந்த க்ளாஸிக்கில் பங்காற்றியதில் பெருமை. அனைத்து நடிகர்களும் அவர்களின் சிறந்த நடிப்பைத் தந்திருந்தனர். சிவாஜியின் மிகச் சிறந்த நடிப்பைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது ஆசீர்வாதம். கமல்ஹாசன், நாசர், கௌதமி, ரேவதி எனப் படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் சிறப்பு. கமலால் அழகாக எழுதப்பட்டது. வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்".
இவ்வாறு பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
#Thevarmagan
Proud to part of this classic which had all the charters brought out the best in them...blessed to witness one of finest acting by Shivaji sir.
Kamalhassan,nazar, gouthami, Revati and each ever charecters in the film.
Written beautiful by Kamal sir, pic.twitter.com/M1gUX7LAjh— pcsreeramISC (@pcsreeram) October 27, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT