Published : 06 Oct 2020 04:15 PM
Last Updated : 06 Oct 2020 04:15 PM

வங்காள நடிகர் சௌமித்ர சாட்டர்ஜிக்கு கோவிட் தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

பிரபல வங்காள நடிகர் சௌமித்ர சாட்டர்ஜிக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சத்யஜித் ரேயின் இயக்கத்தில் அறிமுகமாகி, அவரது 14 படங்களில் நடித்தவர் சௌமித்ர சாட்டர்ஜி. வங்காளத்தில் மிகவும் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர். மிருணாள் சென் உள்ளிட்ட இன்னும் பல பிரபல இயக்குநர்களின் திரைப்படங்களில் சாட்டர்ஜி நடித்துள்ளார். கடைசியாகக் கடந்த ஆண்டு வெளியான 'சன்ஜ்பாதி' திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது 85 வயதாகும் சாட்டர்ஜி, சிறந்த நடிகருக்கான தேசிய விருதோடு சேர்த்து பத்ம பூஷண், தாதா சாகேப் பால்கே விருதுகளையும் வென்றவர். லேசான கரோனா அறிகுறிகளுடன் கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சாட்டர்ஜியின் உடல்நலன் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டறிந்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பல நட்சத்திரங்கள் சாட்டர்ஜி விரைவில் நலம் பெற வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x