Published : 25 Sep 2020 05:41 PM
Last Updated : 25 Sep 2020 05:41 PM
வாழ்க்கை உண்மையில் கணிக்க முடியாத ஒன்று என்று எஸ்பிபி மறைவுக்கு அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதியாகி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு உடல்நிலை தேறி வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் இன்று (செப்டம்பர் 25) மதியம் 1:04 மணிக்கு எஸ்பிபி காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
எஸ்பிபி மறைவு குறித்து அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
”எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவைப் பற்றிக் கேள்விப்பட்டு ஆழ்ந்த வருத்தமடைந்தேன். இந்த ஊரடங்கு சமயத்தில் இணையம் வழியாக நடந்த இசை நிகழ்ச்சிக்காக அவருடன் நான் சில மாதங்களுக்கு முன்பு உரையாடியிருந்தேன். அவர் அன்று மிகவும் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாகக் காணப்பட்டார். வாழ்க்கை உண்மையில் கணிக்க முடியாத ஒன்று. அவரது குடும்பத்துக்கு எனது ஆறுதல்கள், இரங்கல்கள்".
இவ்வாறு அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.
Deeply saddened to hear about the demise of Balasubrahmanyam ji.Just a few months back I’d interacted with him during a virtual concert in this lockdown..he seemed hale,hearty & his usual legendary self...life is truly unpredictable. My thoughts & prayers with his family#RIPSPB pic.twitter.com/NytdM7YhBL
— Akshay Kumar (@akshaykumar) September 25, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT