Last Updated : 11 Sep, 2020 11:49 AM

 

Published : 11 Sep 2020 11:49 AM
Last Updated : 11 Sep 2020 11:49 AM

ஒரு போதை அடிமையுடன் என்னை ஒப்பிட வேண்டாம் - சோனம் கபூருக்கு கங்கணா பதிலடி

இந்தி திரையுலகில் போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நடிகை கங்கனா ரனாவத் அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும், இந்த விவகாரத்தில் மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனாவையும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு சிவசேனா சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை போல மகாராஷ்டிரா மாறியுள்ளது’ என்று கங்கனா கூறினார். சிவசேனாவுடனான இந்த மோதல் போக்கு காரணமாக அவர் இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து மும்பை வருவதில் சிக்கல் எழுந்தது. எனினும், மத்திய அரசின் ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்புடன் நேற்று முன்தினம் அவர் மும்பை வந்தார்.

இந்த சூழலில், அனுமதியை மீறி கட்டப்பட்டிருப்பதாக கூறி, கங்கனாவின் மும்பை அலுவலகத்தின் ஒரு பகுதியை மாநகராட்சி அதிகாரிகள் அன்றைய தினம் இடித்தனர். மும்பை உயர் நீதிமன்றத்தின் தலையீட்டை அடுத்து, இந்த நடவடிக்கை பாதியில் நிறுத்தப்பட்டிருக்கிறது.

மும்பை மாநகராட்சி அதிகாரிகளின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கங்கணா மற்றும் ரியா விவகாரங்களை குறிப்பிட்டு நடிகை சோனம் கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கண்ணுக்கு கண் என்பதுதான் தீர்வு என்றால் மொத்த உலகமும் குருடாகிவிடும்’ என்று கருத்து தெரிவித்திருந்தார்.

சோனம் கபூரின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள கங்கணா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

திடீரென்று இந்த மாஃபியா முட்டாள்கள் ரியாவோட சேர்த்து எனக்கும் நீதி கேட்க தொடங்கியிருக்கின்றனர். நான் மக்களுக்காக போராடுகிறேன். என்னுடைய போராட்டங்களை மனமுடைந்த, சுயமாக உருவான சூப்பர்ஸ்டாரின் நிழலில் வாழு, ஒரு சிறிய போதை அடிமையுடன் ஒப்பிட வேண்டாம். இதை உடனே நிறுத்துங்கள்.

இவ்வாறு கங்கணா கூறியுள்ளார்.

சுஷாந்த் தற்கொலையை தொடர்ந்து பாலிவுட்டின் நிலவும் வாரிசு அரசியலுக்கு எதிராகவும், ஆலியா பட், சோனம் கபூர் உள்ளிட்ட வாரிசு நடிகர்களுக்கு எதிராகவும் கங்கணா கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x