Published : 30 Aug 2020 05:08 PM
Last Updated : 30 Aug 2020 05:08 PM

'ப்ளாக் பேந்தர்' நடிகரின் இரங்கல் செய்தி ட்விட்டரில் சாதனை

லாஸ் ஏஞ்சல்ஸ்

'ப்ளாக் பேந்தர்' நடிகர் சாட்விக் போஸ்மேனின் இரங்கல் செய்தி, ட்விட்டர் தளத்தில் சாதனை புரிந்துள்ளது.

ஹாலிவுட் படங்களில் மிக முக்கியமான நடிகராக வலம் வந்தவர் சாட்விக் போஸ்மேன். மார்வெல் நிறுவனத்தின் புகழ்பெற்ற ‘ப்ளாக் பேந்தர்’ கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர். 2016-ம் ஆண்டு வெளியான ‘கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்’ படத்தில் ப்ளாக் பேந்தராக முதன்முதலில் தலைகாட்டினார் போஸ்மேன்.

2017-ம் ஆண்டு சாட்விக் போஸ்மேனை வைத்து ‘ப்ளாக் பேந்தர்’ கதாபாத்திரத்துக்காகவே ஒரு முழு நீள படத்தை தயாரித்தது மார்வெல் நிறுவனம். படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் உலகம் முழுவதுமுள்ள மார்வெல் ரசிகர்களின் மனதில் ப்ளாக் பேந்தராகவே பதிந்தார் போஸ்மேன்.

இந்தச் சூழலில் கடந்த 2016-ம் ஆண்டு போஸ்மேனுக்கு பெருங்குடல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக கடந்த நான்கு ஆண்டுகளாகச் சிகிச்சை மேற்கொண்டு வந்தார் போஸ்மேன். ஆனால் தனக்கு புற்றுநோய் இருப்பது குறித்து வெளி உலகத்துக்கு அவர் அறிவிக்கவில்லை. சிகிச்சையின் நடுவே திரைப்படங்களிலும் நடித்து வந்துள்ளார்.

சிகிச்சை பலனின்றி சாட்விக் போஸ்மேன் ஆகஸ்ட் 28-ம் தேதி காலமானார். அவரது மறைவு ஹாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு முன்னணி நடிகர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் என இரங்கல் தெரிவித்தார்கள்.

அவருடைய மறைவு குறித்து குடும்பத்தினர் அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் மற்றும் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். இதன் மூலமே உலகமெங்கும் அவரது மறைவு குறித்து தெரியவந்தது. இந்த ட்வீட் தான் ட்விட்டர் தளத்தில் பெரும் சாதனை புரிந்துள்ளது.

ட்விட்டர் தளத்தில் அதிகம் பேர் லைக்ஸ் செய்த ட்வீட்டாக சாட்விக் போஸ்மேன் மறைவு ட்வீட் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக ட்விட்டர் தளம் "இது தான் அதிகம் பேர் லைக்ஸ் செய்த ட்வீட். ஓர் அரசனுக்கு பொருத்தமான அஞ்சலி" என்று தெரிவித்துள்ளது.

— Twitter (@Twitter) August 29, 2020

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x