Published : 29 Aug 2020 11:45 AM
Last Updated : 29 Aug 2020 11:45 AM
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்பவர் சன்னி லியோன். கரோனா ஊரடங்கு காரணமாக தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கொல்கத்தாவின் அஷுடோஷ் கல்லூரியின் பி.ஏ. ஆங்கிலம் சேர்க்கைக்கான மெரிட் பட்டியல் வெளியானது. இதில் நடிகை சன்னி லியோனின் பெயரும் இடம்பெற்றிருந்தது. அது மட்டுமின்றி அவர் இந்த ஆண்டு நடந்த ப்ளஸ் 2 தேர்வில் 400 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வந்ததால் இந்த செய்தி இந்திய அளவில் ட்ரெண்டானது.
இந்த செய்தியை சன்னி லியோனும் நேற்று ( 28.08.19) தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘கல்லூரியில் அடுத்த செமஸ்டரில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். நீங்கள் அனைவரும் என் வகுப்பில் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்’ என்று கிண்டலாக பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அஷுடோஷ் கல்லூரி நிர்வாகம் சார்பில் கொல்கத்தா சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
கல்லூரியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி நடந்துள்ளதாகவும், இதற்கு கடுமையான நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல் இனிவரும் காலங்களிலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவேண்டும் என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT