Published : 26 Aug 2020 03:46 PM
Last Updated : 26 Aug 2020 03:46 PM
பாலிவுட் நடிகர்களை தன் கண்காணிப்பு வலைக்குள் கொண்டு வந்துள்ளது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பத்திரிகையான பஞ்சஜன்யா. தன்னுடைய சமீபத்திய பதிப்பில் நடிகர் அமீர் கானை தாக்கிப் பேசியுள்ளதோடு அஜய் தேவ்கன், அக்ஷய் குமார் ஆகியோரை விதந்தோதியுள்ளது.
அதாவது அமீர் கானின் சமீபத்திய செயல்பாடுகள் தேசப்பற்றுடன் இல்லை என்று விமர்சித்துள்ளது. இந்த இதழின் எடிட்டர் ஹிதேஷ் சங்கர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது, “லகான், சர்பரோஷ், 1857 போன்ற படங்களை அமீர் கான் எடுத்தாலும் அவரது சமீபத்திய செய்கைகல் தேசிய மனப்பான்மையில் இல்லை.
துருக்கி அதிபர் எர்டோகனின் மனைவியை அவர் சந்தித்தது இந்தியர்களை புண்படுத்தியுள்ளது. எர்டோகனின் அரசு ஜம்மு காஷ்மீர் தொடர்பாக இந்தியாவை எதிர்த்து வருகிறது. இதோடு மட்டுமல்லாமல் மற்ற இந்திய நட்சத்திரங்களை ஒப்பிடும்போது அமீர் கான் ஏன் சீனாவில் பிரபலமாக இருக்கிறார் என்ற புதிரையும் அவிழ்க்க விரும்புகிறோம்.
சல்மான் கானின் சுல்தானை விட அமீர் கானின் டங்கல் அங்கு பெரிய வரவேற்பைப் பெற்றது. இரண்டும் கிட்டத்தட்ட ஒரே கதையமைப்புக் கொண்டதுதான். சீன பொருட்கள் சிலவற்றை அமீர் கான் விளம்பரம் செய்கிறார். சீனாவில் அந்நாட்டு அரசு மனது வைத்தால்தான் அங்கு பிரபலமாக முடியும்” என்றார்.
Dragon Ka Pyara Khan (ட்ராகனின் மனதுக்கினிய கான்) என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் அக்ஷய் குமார், கங்கனா ரணவது, அஜய் தேவ்கன் ஆகியோரை புகழ்ந்து எழுதப்பட்டுள்ளது. தேசிய உணர்வுடன் இவர்கள் படம் உள்ளதாகவும் இழந்த மரபுகளை மீட்டெடுப்பதாகவும் ஆர்.எஸ்.எஸ் பத்திரிக்கையில் புகழப்பட்டுள்ளது.
“இந்திய சீன ராணுவத்தினரிடையே கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் ஏற்படட் பிறகு அஜய் தேவ்கன் இது தொடர்பாக ஒரு படம் எடுக்கப் போவதாக அறிவித்தார். இது ஒன்றே ‘அக்ஷய் குமாருக்குப் பிறகு தேசியவாத பூச்சி தேவ்கனை கடித்து விட்டது’ என்று கிண்டலுக்கு ஆளானது.
அமீர் கான் மீதான விமர்சனத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பாக அவர் இந்தியாவில் சகிப்பின்மை வளர்ந்து வருகிறது என்றும் தன்குடும்பத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது என்று பேசியது குறிப்பிடப்பட்டுள்ளது.
-தமிழில் சுருக்கமாக, இரா.முத்துக்குமார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...