Published : 24 Aug 2020 04:28 PM
Last Updated : 24 Aug 2020 04:28 PM
தமிழக அரசின் அறிவிப்பை எதிர்நோக்கி உள்ளதாக விஷால் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்து சினிமா படப்பிடிப்புகள் இந்தியா முழுக்கவே ரத்து செய்யப்பட்டன. மேலும், திரையரங்குகளும் மூடப்பட்டதால் தயாரிப்பாளர்களுக்குக் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. தற்போது கரோனா ஊரடங்கிலிருந்து மத்திய அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது.
இதில் நேற்று (ஆகஸ்ட் 23) படப்பிடிப்புக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், படப்பிடிப்புத் தளத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் பட்டியலிட்டுள்ளது. இதனால், விரைவில் தமிழக அரசும் படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே படப்பிடிப்புக்கான அனுமதி தொடர்பாக நடிகர் விஷால் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசுக்கு நன்றி. பாதுகாப்பான சூழலுக்குத் தேவையான அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி அனைத்துத் திரைப்படப் படப்பிடிப்புகளும் மீண்டும் தொடங்கும் என்று நம்புகிறேன். எப்போது திரைப்படப் படப்பிடிப்பு தொடங்கலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பை எதிர்நோக்குகிறேன்"
இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.
தற்போது எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் உருவாகி வரும் 'சக்ரா' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால். இதன் படப்பிடிப்பு இன்னும் 7 நாட்கள் மட்டுமே பாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Thanks to the Central Govt for granting permission to resume Shoot & hopefully all Film Units will resume Shoot by following all Necessary Regulations for a Safe Environment....
Looking forward for the TN State Govt to announce the date to resume Movie Shoot....GB
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT