Last Updated : 14 Aug, 2020 11:27 AM

 

Published : 14 Aug 2020 11:27 AM
Last Updated : 14 Aug 2020 11:27 AM

ஸ்டண்ட் கலைஞர்களுக்கு நடிகர் வித்யுத் ஜம்வால் பண உதவி

கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த ஸ்டண்ட் கலைஞர்களுக்கு நடிகர் வித்யுத் ஜம்வால் பண உதவி செய்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா ஊரடங்கால் வெள்ளித்திரை, சின்னத்திரை படப்பிடிப்பு எதுவும் பல மாதங்களாக நடைபெறவில்லை. திரைப்படங்களைப் பொறுத்தவரை போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்புக்கான அனுமதியும் தற்போது தரப்பட்டுள்ளது.

ஆனால், நடனக் கலைஞர்கள், ஸ்டண்ட் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் படப்பிடிப்பு இல்லாததால் கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இதனால் துறையில் இருக்கும் தினக்கூலிப் பணியாளர்களுக்குப் பல்வேறு நட்சத்திரங்களும் உதவ முன் வந்தனர்.

சல்மான் கான், கத்ரீனா கைஃப், சோனு சூட் உள்ளிட்ட பலரும் சினிமா தொழிலாளர்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாகப் பணம் அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் திரைப்பட ஸ்டண்ட் கலைஞர்களின் கூட்டமைப்பில் உள்ள ஸ்டண்ட் கலைஞர்களுக்கு நடிகர் வித்யுத் ஜம்வால் பண உதவி செய்துள்ளார். அவர்களுக்கு தன் கைப்பட ஒரு கடிதத்தையும் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர்களை ‘திரை போராளிகள்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு உதவ மற்றவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து வித்யுத் ஜம்வால் கூறியிருப்பதாவது:

நமது ஸ்டண்ட் கலைஞர்களுக்கு நம்முடைய ஆதரவு தேவை. அவர்களுக்கு உதவ முடிந்தவர்கள் தயவுசெய்து முன்வரவும். இது அனைவருக்கும் குறிப்பாக என் சக நடிகர்களுக்கு என் தாழ்மையான வேண்டுகோள். நீங்கள் செய்யும் உதவி அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும். ஒரு சிறப்பான உலகை உருவாக்க நாம் நம் தாராளமனதை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு வித்யுத் ஜம்வால் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x