Published : 12 Aug 2020 09:33 PM
Last Updated : 12 Aug 2020 09:33 PM

'என்.டி.ஆர்' பயோபிக் சர்ச்சை: தேவ் கட்டா Vs விஷ்ணு வர்தன் இந்தூரி

ஹைதராபாத்

'என்.டி.ஆர்' பயோபிக் தொடர்பாக இயக்குநர் தேவ் கட்டா மற்றும் விஷ்ணு வர்தன் இந்தூரி இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி மற்றும் சந்திரபாபு நாயுடு இருவருக்கும் இடையேயான நட்பு, அரசியல் நகர்கள், கருத்து பரிமாற்றம் உள்ளிட்டவை குறித்து வெப் சீரிஸ் ஒன்று தயாராகவுள்ளது. இதனை ராஜ் இயக்கிய, திருமால் ரெட்டி மற்றும் விஷ்ணு வர்தன் இந்தூரி இணைந்து தயாரிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியானது.

ஆந்திரா அரசியலில் இருவருமே முக்கியமான தலைவர்கள் என்பதால் பலரும் இதனைப் பகிரத் தொடங்கினார். இந்த வெப் சீரிஸ் தொடர்பான செய்தியைப் பகிர்ந்து க 'பிரசாதனம்' படத்தின் இயக்குநர் தேவ் கட்டா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"நான் ஒரு விஷயத்தை பொதுவில் சொல்ல வேண்டியிருக்கிறது. 2017-ம் ஆண்டு, ஒய்.எஸ்.ஆர்/சந்திரபாபு நயுடு ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர்களின் அரசியல் வாழ்க்கையை, நட்பு/தொழில் போட்டியைப் பற்றிப் பேசும் ஒரு கற்பனைக் கதையை எழுதி அதைக் காப்புரிமை சட்டத்தின் கீழ் பதிவும் செய்து வைத்திருந்தேன்.

2017-ம் ஆண்டு முதல் இந்த கதையின் பல்வேறு வடிவங்களையும் கூட பதிவு செய்து வைத்திருந்தேன். கட்சிக்காரர்களின் உதவியுடன் இந்த யோசனை சில பேரால் திருடப்படுகிறது. ஆனால் அவர்கள் தங்களுடைய கற்பனையை ஒரு பொது எல்லைக்குள் வைத்திருப்பார்கள் என்றும் என்னுடைய பதிவு செய்யப்பட்ட கரு/ காட்சிகளைக் காப்பியடிப்பதன் மூலம் எந்த ஒரு சட்டப்பூர்வ நடவடிக்கைக்கும் ஆளாகமாட்டார்கள் என்றும் நம்புகிறேன்.

'காட்ஃபாதர்' பட பாணியில் இந்த கதை முதலில் 3 பாகங்களாக எழுதப்பட்டது. பின்னர் அதை நான் ஒரு வெப் சீரிஸ் வடிவமாக மாற்றினேன். இந்த யோசனையை என்னுடைய குழுவினர் சில முன்னணி ஓடிடி தளங்களுக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த செய்தியை எங்கள் சட்ட ஆலோசனை குழுவினர் கவனமாக கண்காணித்து வருகின்றனர்.

முன்னதாக இதே நபர் நான் சொல்லியிருந்த இன்னொரு கதையையும் திருடி அதை மிகப்பெரிய அளவில் சொதப்பி வைத்தார். ஒய்.எஸ்.ஆர் மற்றும் சந்திரபாபு நாயுடு மேல் உள்ள மரியாதையில் உருவான இன்னொரு நல்ல கதையைப் பாழாக்க, அவரை நான் இந்த முறை அனுமதிக்கப் போவதில்லை.

நான் இயக்குநர் ராஜ் அல்லது சதரங்கம் பற்றிப் பேசவில்லை. நான் விஷ்ணு இந்தூரி மற்றும் 2015-ம் ஆண்டு டிசம்பரில் எங்களுக்குள் நடந்த என்.டி.ஆர் பயோபிக் உரையாடல்கள் பற்றியே பேசுகிறேன்"

இவ்வாறு தேவ் கட்டா தெரிவித்திருந்தார்.

தேவ் கட்டாவின் ட்வீட் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த ட்வீட்டை மேற்கொளிட்டு தயாரிப்பாளர் விஷ்ணு வர்தன் இந்தூரி தனது ட்விட்டர் பதிவில் "இதை நான் முழுமையாக தெளிவுபடுத்த விரும்புகிறேன். 2015 டிசம்பரில் நான் தேர்வு செய்த ஒரு ரீமேக்குக்காக தேவ் கட்டாவை சந்தித்தேன்.

அப்போது, அடிப்படை திரைக்கதையோடு, என்.டி.ஆர் பயோபிக் குறித்த யோசனையையும் நான் அவரிடம் கூறினேன். அது அவருக்குப் பிடித்திருந்தது. அவர் என்.டி.ஆர் பயோபிக் குறித்து எந்த கதையும் எனக்கு விவரிக்கவில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

— Vishnu Vardhan Induri (@vishinduri) August 11, 2020

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x